×

மின்மய பணிகள் முடிவுற்றதால் நிலத்தின் சத்துக்கள் விரயமின்றி சேமிக்க பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட வேளாண் இயக்குனர் வேண்டுகோள்

வலங்கைமான், ஜன.24: நிலத்தின் சத்துக்கள் விரயம் ஆகாமல் சேமிக்க பசுந்தாள் உரப்பயிர்களை பயிர் செய்ய வலங்கைமான் வட்டார விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். உழைக்கும் மனிதனுக்கு ஓய்வு எவ்வளவு முக்கியமோ அதேபோல நிலத்திற்கும் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். ஒரு வருடத்திற்கு ஒரு பருவம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். அதாவது நிலத்தில் பயிர் சாகுபடி செய்து செயற்கை உரத்தை இடாமல் நிலத்தை பராமரிப்பதாகும். அதற்கு பயிர் சாகுபடி ஏதும் செய்யாமல் சணப்பு, தக்கைப்பூண்டு மற்றும் கொளுஞ்சி போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை பயிர் செய்வதால் கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும். நிலத்திற்கு ஓய்வு அளிக்கப்படுவதோடு நிலத்தின் சத்துக்கள் விரயம் ஆகாமல் சேமிக்கப்படுகிறது. மேலும் மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல மடங்காக பெருக்கம் செய்கிறது. இவைகள் அடுத்து சாகுபடி செய்யும் பயிர்களுக்கு மண்ணில் உள்ள சத்துகளை எடுத்து கொடுப்பதில் மிக தீவிரமாக செயல்படும். மண்ணில் தழைச்சத்தினையும் அங்ககப் பொருட்களையும் நிலை நிறுத்த உதவுகிறது. மண் அரிமானம் தடைப்பட்டு மண் அமைப்பு மேம்படுகிறது. மண்ணின் நீர் பிடிப்பு திறன் அதிகரித்து காரத் தன்மையுடைய மண்ணைச் சீர்திருத்த உதவுகிறது என வலங்கைமான் வட்டார விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!