×

மன்னார்குடி போலீசார் அதிரடி திருமக்கோட்டை அருகே சிதிலமடைந்த வேளாண் கிடங்கை அகற்றி புதிதாக கட்டித்தர வேண்டும்

மன்னார்குடி, ஜன. 24: திருமக்கோட்டை அருகே வல்லூர் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள வேளாண் கிடங்கை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே வல்லூர் கிராமத்தில் தமிழக வேளாண்மை விரிவாக்க மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துணை வேளாண் கிடங்கு உள்ளது. திருமக்கோட்டை, வல்லூர், ராதாநரசிம்மபுரம், தென்பரை, பாளையக்கோட்டை, இளவனூர், புதுக்குடி, சமுதாயம், கன்னியாக்குறிச்சி, மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்கள், விதைகள், மரக்கன்றுகள், உழவுக்கருவிகள், ஆகியவற்றை இந்த கிடங்கில் இருந்து பெற்று சாகுபடி செய்து வருகின்றனர்.

மேலும் பயிர் காப்பீடு செய்வதற்கும் இந்த கிடங்கிற்கு வர வேண்டி இருப்பதால் எக்கிடங்கிற்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்கின்றனர். வேளாண் கிடங்கு இயங்கி வரும் கட்டிடம் கட்டி பல வருடங்கள் ஆகிறது. போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இந்த கட்டிடம் சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு வீசிய கஜா புயலால் இக்கட்டிடம் மேலும் சேத மடைந்து கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. பழமையான கட்டிடம் என்பதால் நாளுக்குநாள் சிதிலமடைந்து வருகிறது. எந்த நேரத்திலும் இக்கட்டிடம் முழுவதும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த கிடங்கிற்கு விவசாயிகள் வர அஞ்சுகின்றனர். இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு பலமுறைகள் எடுத்துக் கூறியும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த உயரதிகாரிகள் வல்லூர் கிராமத் திற்கு நேரில் வந்து அங்கு சேதமடைந்த நிலையில் உள்ள வேளாண் கிடங் கை பார்வையிட்டு பெரும் விபத்து ஏற்படும் முன்பு அக்கட்டிடத்தை முற்றி லும் அகற்றி விட்டு புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டி அதில் வேளாண் கிடங் கை தொடர்ந்து இயங்க அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : warehouse ,Mannargudi ,police action ,Tirumakottai ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்