×

கலெக்டர் வேண்டுகோள் நீடாமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு நெல் தரிசில் பயறுவகை பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை

நீடாமங்கலம், ஜன.24: நீடாமங்கலம் வட்டார விவசாயிகள் நெல் தரிசில் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெற வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன் கேட்டுக்கொள்கிறார். மனிதனுடைய உணவில் முக்கிய பங்கு வகிப்பது புரதச்சத்து. இவை பயறுவகை பயிர்களில் தான் கிடைக்கிறது. பயிறுவகை பயிர்கள் சாகுபடி மற்ற பயிர்களை விட செலவு குறைவுதான். நெல் தரிசில் சம்பா தாளடி சாகுபடிக்கு பிறகு தை, மாசி மாதங்களில் பயிர்வகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளலாம். சம்பா தாளடி நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் மண் ஈரப்பதமாக மெழுகுபதத்தில் இருக்கும் போது விதைப்பு எடுக்கலாம். கூடுதலாக ஈரம் இருப்பின் மெழுகுப்பதம் வந்தபின் விதைக்கலாம் அல்லது அறுவடைக்கு பின் ஈரப்பதம் இருக்கும் போது கயிறு பிடித்து வரிசையாக உளுந்து மற்றும் பயிறு விதைகளை ஊன்றலாம். தொடர்ச்சியாக நெல்லைபயிர் செய்யாமல் பயிறுவகை பயிர்கள் சாகுபடி செய்வது சிறந்த பயிர் சுழற்ச்சி முறையாகும்.பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்தால் வேர்முடிச்சி மூலம் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படுகிறது.இதனால் மண்வளம் மேம்படும் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி முறை மாறுகிறது. இதனால் பயிரில் பூச்சிகள் தாக்குதல் குறையும். மேலும் இந்த பயிருகள் விவசாயிகளுக்கு கணிசமான வருமானத்தை தந்து விவசாயிகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : area ,Neetamangalam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...