×

போச்சம்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

போச்சம்பள்ளி, ஜன.24: போச்சம்பள்ளி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் துவங்கிய இப்பேரணியை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் துவக்கி வைத்தார். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயபாலன், காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் வழக்கறிஞர்கள், காவல்துறையினர், நீதிமன்ற ஊழியர்கள், ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பொதுமக்களிடம் நீதிபதி செல்வகுமார் துண்டு பிரசுரங்களை கொடுத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினார்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் தென்னங்கன்று விற்பனை அமோகம்; வியாபாரிகள் மகிழ்ச்சி