×

ஓசூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஓசூர், ஜன.24: சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, ஓசூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மூன்றாம் நாள் உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமினை டிஎஸ்பி சங்கு துவக்கி வைத்தார். ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், தரணிதர் ஆகியோரின் மேற்பார்வையில் இம்முகாம் நடைபெற்றது. இதில், ஓசூர் பகுதியில் இயங்கி வரும் வாசன், சபரி, குணம் கண் மருத்துவமனைகள் மற்றும் ஆரோக்கிய ஹெல்த் கேர் ஆகிய மருத்துவமனைகளின் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். முகாமில் 750க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்று தங்களது உடல், கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

Tags : Eye Test Camp ,Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...