×

சிதிலமடைந்த அரசு பள்ளி சீரமைப்பு

தர்மபுரி, ஜன.24: சிதிலமடைந்த கானப்பட்டி அரசு பள்ளியை ஊராட்சி மன்ற தலைவர் சீரமைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். நல்லம்பள்ளி வட்டம், கானப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளியில், 82 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஆறுமுகம் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இப்பள்ளி வளாகம் குண்டும், குழியுமாக புதர் மண்டி கிடந்தது. உள்ளாட்சி தேர்தலின் போது, கானப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கணேஷ்குமார், இப்பள்ளியை சீரமைத்து தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன், பள்ளியை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து நேற்று ₹1.50 லட்சம் மதிப்பில், பள்ளி வளாகத்தை சுற்றி மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ்குமார், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, பசுமையாக்கல் திட்டத்தை துவக்கி வைத்தார். இதை பூங்கா போல் பராமரிக்க மாணவ, மாணவிகள் உறுதி மேற்கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா