×

பாடாலூர் அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் 2பேர் சாவு

பாடாலூர், ஜன 24: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே நேற்று இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஏழுமலை (17). இவர், பாடாலூரில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அலுந்தலைப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் கீர்த்திராஜ் (15). அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஏழுமலை, கீர்த்திராஜூடன் செட்டிக்குளத்திலிருந்து ஆலத்தூர் கேட் பகுதிக்கு ஏழுமலை பைக்கில் சென்றார். அப்போது செட்டிக்குளம் சாலையில் சென்றபோது எதிரே சைக்கிளில் சென்ற ரெங்கநாதன் (40) என்பவர் மீது மோதி, பைக்கில் சென்ற மாணவர்கள் கீழே விழுந்தனர். அப்போது, அதே வழித்தடத்தில் ரப்பர் ஏற்றி வந்த லாரி இளைஞர்கள் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை அவரது நண்பர் கீர்த்திராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவர்களின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : school children ,road accident ,Patalur ,
× RELATED அவிநாசியில் அருகே சாலை விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் பலி