அரியலூர் அரசு மருத்துவமனையில் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை

அரியலூர், ஜன.24: சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் டிரைவர்களுக்கு கண் மற்றும் உடல் பரிசோதனை முகாம் நேற்று முன்தினம் நடந்தது. முகாமை கலெக்டர் ரத்னா பார்வையிட்டார். இதில் அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் சிமென்ட் ஆலைகளில் பணிபுரியும் வாகன டிரைவர்கள், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள் என 350 பேருக்கு கண் மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் ரவிசங்கர், மருத்துவர்கள் கொளஞ்சிநாதன், கண்மணி, ஜெயசுதா ஆகியோர் பங்கேற்று டிரைவர்களுக்கு கண் மற்றும் உடல் பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் ஆய்வாளர் சரவணபவா, போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், கிளை மேலாளர் ராம்குமார், பொறியாளர்கள் சீமான், மாறன், செல்வமுருகன் செய்திருந்தனர்.

Tags : Eye examination ,drivers ,Ariyalur Government Hospital ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்