×

பெரம்பலூரில் குடியரசு தினவிழா பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி ஒத்திகை

பெரம்பலூர், ஜன.24: பெரம்பலூரில் குடியரசு தினவிழாவில் 6 பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, பள்ளிகளில் ஒத்திகைகள் தொடங்கின. இந்திய நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாடெ ங்கும் வருகிற 26ம் தேதி கோலாகலமாக கொண்டா டப்பட உள்ளது. இதனை யொட்டி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 26ம்தேதி நடைபெறும் நாட்டின் 71 வது குடியரசு தின விழாவில் பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி, தியாகி களைக்கவுரவித்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கவு ள்ளார். பல்வேறு துறைக ளில் சாதனை புரிந்தோரு க்கு நற்சான்றிதழ்களை யும், பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிக ளையும் வழங்கியப் பிறகு, பள்ளி மாணவ மாணவிய ரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. விழாவின் முடிவில் பெரம் பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்த அர சு மகளிர் உயர்நிலைப் பள் ளி, பெரம்பலூர் ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள் ளி, சாரதாதேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, தந்தை ஹே ன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி, தனலட்சுமி சீனிவா சன் மேல்நிலைப்பள்ளி ஆ கிய 6 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவ,மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச் சிகள் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜேந்தி ரன் தலைமையில் அனைத் துத்துறைஅதிகாரிகள் செ ய்து வருகின்றனர். இதில் கலை நிகழ்ச்சிகளுக்கான முதல்கட்ட ஒத்திகை நேற்று முன்தினம் (22ம்தேதி) பள்ளிகளில் நடத்தப்பட்டது. 2ம்கட்ட ஒத் திகை இன்று (24ம்தேதி) பள்ளிகளில் நடக்கிறது. இறுதி ஒத்திகை நாளை (25ம் தேதி) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

Tags : Republic Day Celebration ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி