×

டூவீலரில் சென்றவரை படுகொலை ெசய்தவர்கள் கைது 24 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்சுழி, ஜன. 24: திருச்சுழி அருகே டூவீலரில் சென்றவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தவர்களை 24 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார். திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளத்தை சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டன் (39). இவர் மதுரை மாவட்டம் பனங்காடு பகுதியில் பில்டிங் கான்ட்ராக்டராக வேலை செய்து வந்தார். பின்பு திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் திருச்சுழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க விருதுநகர் மாவட்டம எஸ்பி பெருமாள் உத்தரவின்பேரில் திருச்சுழி டிஎஸ்பி சசிதர் ஆலோசனையின்பேரில் திருச்சுழி, நரிக்குடி காவல் ஆய்வாளர்கள் மூக்கன், ஜேசு  ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் திருச்சுழி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டறிந்து கொலையில் ஈடுபட்ட நான்கு பேரை அதிரடியாக 24 மணி நேரத்தில் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் பகுதியில் வைத்து மணிகண்டனின் அக்கா கணவர் கருப்பசாமியை மதுரையைச் சேர்ந்த அரவிந்தன் தரப்பைச் சேர்ந்தவர்கள் வெட்டியுள்ளனர். அதற்கு பதிலாக மணிகண்டன் மதுரை மாவட்டம் கருப்பையா ஊரணி பகுதியில் வைத்து அரவிந்தனை கடந்த 2018ம் ஆண்டு வெட்டி கொலை செய்து, டூவீலரோடு எரித்தார். இந்த வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். புதுக்கோட்டையில் குடும்பத்தோடு சில மாதங்களாக வசித்து வந்ததார். மேலும் மதுரையில் அரவிந்தன் சகோதரர்களை தீர்த்துக்கட்ட மணிகண்டன் பனங்காடு பகுதியில் அவர்கள் பற்றி விசாரித்துள்ளார்.

இதையறிந்த மதுரை பனங்காட்டை சேர்ந்த அரவிந்தன் சகோதரர் வசந்த் (20) நண்பர்களுடன் இணைந்து மணிகண்டனை தீர்த்து கட்ட கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திட்டம் போட்டார். கார்த்தி என்ற செல்வபாண்டி கடந்த இருதினங்களுக்கு முன்பே அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி பகுதியில் மணிகண்டன் பற்றி விசாரித்து வந்தார். மணிகண்டன் நடமாட்டத்தை கண்காணித்த பின்பு வசந்த் (20), அதே ஊரைச் சேர்ந்த விஜய் (21), வேலன் (21) ஆகியோரும் திருச்சுழி பகுதியில் காலை நேரத்தில் பதுங்கிருந்து மணிகண்டன் அருப்புக்கோட்டை நோக்கி வரும்போது சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்ர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் நான்கு பேர் மீதும் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் தனிப்படை அமைத்து கைது செய்த போலீசாருக்கு விருதுநகர் எஸ்பி பெருமாள் பாராட்டு தெரிவித்தார்.

Tags : murders ,SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்