×

விருதுநகரில் ரயில் நிலையத்தில் கழிப்பறைகளுக்கு பூட்டு பயணிகள் கடும் அவதி

விருதுநகர், ஜன. 24: விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையமான விருதுநகர் ரயில் நிலையம் வழியாக தினசரி 65க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து பயணித்து வருகின்றனர். 4 பிளாட்பாரங்களை உடைய விருதுநகர் ரயில் நிலையத்தில் முதல் மூன்று பிளாட்பாரங்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. 4வது பிளாட்பாரம் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை.
முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பாரங்களில் பயணிக்கான கழிப்பறைகள் உள்ளன.

முதல் பிளாட்பாரத்தில் உள்ள கழிப்பறை கட்டண கழிப்பறையாக செயல்பாட்டில் உள்ளது.  இரண்டாவது பிளாட்பாரத்தின் கடைக்கோடியில் உள்ள கழிப்பறை பயன்படுத்த முடியாதபடி மூடி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிளாட்பாரத்தில் உள்ள கழிப்பறை மூடிக்கிடப்பதால் இரண்டு மற்றும் மூன்றாவது பிளாட்டி பாரத்தை பயன்படுத்தும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரயில்களுக்காக காத்திருப்போர் கழிப்பறை வசதி இல்லாத நிலையில் பயணிகள் மற்றும் பயணிகளுடன் வருவோர் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்தும், இறங்கி தண்டவாளத்திலும் சிறுநீர் கழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பயணிகள் வசதி கருதி இரண்டாவது மற்றும் மூன்றாவது பிளாட்பாரத்தின் நடுமையத்தில் நவீன கழிப்பறை கட்டி திறக்க வேண்டும். அதுவரை இரண்டாவது கடைக்கோடியில் உள்ள கழிப்பறையை பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Lock commuters ,railway station ,Virudhunagar ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...