×

தேசிய அளவிலான பூப்பந்து போட்டி வத்திராயிருப்பு மாணவர்களுக்கு தங்கம்

வத்திராயிருப்பு, ஜன. 24: 65வது இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், நாராயணபுரத்தில் தேசிய அளவிலான பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தங்கேஷ்வரன் என்ற மாணவன் 14 14 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும், முத்துமணிகண்டன் சம்பத்குமார் ஆகிய 11ம் வகுப்பு மாணவர்கள் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும், சதீஸ் என்ற 12ம் வகுப்பு மாணவன் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். இந்த 4 மாணவர்களுக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளித்தலைவர் ரமாகாந்தன் தலைமை வகித்தார். செயலாளர் சங்கரகிருஷ்ணமூா–்த்தி, தலைமையாசிரியர் ராஜசேகரன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயக்குமார், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ராமசுப்பிரமணியன் ராம்சுந்தர் பாலசுப்பிரமணியன் மற்றும் பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : National Badminton Tournament ,
× RELATED திருவனந்தபுரம் விமான நிலையத்தில்...