×

மைசூர் யோகா போட்டியில் ராஜபாளையம் மாணவருக்கு தங்கம்

ராஜபாளையம், ஜன. 24: மைசூரில் நடந்த யோகா போட்டியில் ராஜபாளையம் மாணவர் தங்கம் வென்றார். கர்நாடக மாநிலம் மைசூர் கண்காட்சி திடலில் தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. வயது பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற போட்டியில் 16 மாநிலங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் நவீன்குமார், 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் தங்க பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவரையும், பயிற்சியாளர் சையதுஜூனைத் முனிரையும் கிங்மேக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் அனைவரும் பாராட்டினர்.

Tags : student ,Rajapalayam ,Mysore Yoga Competition ,
× RELATED ராஜபாளையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை