×

மதுரை-போடி அகல ரயில்பாதையில் உசிலம்பட்டி வரை இன்று ரயில் சோதனை ஓட்டம் ரயில்வே தடத்தை அதிகாரிகள் ஆய்வு

உசிலம்பட்டி, ஜன.24:  மதுரை-போடி அகல ரயில்பாதையில் உசிலம்பட்டி வரை இன்று சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில், டிராலிகள் மூலம் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை-போடி அகல ரயில்பாதையில் உசிலம்பட்டி வரை இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதற்காக தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன், நிர்வாக முதன்மை அதிகாரி சின்கா ஆகியோர் தலைமையில் நேற்று டிராலிகள் மூலமாக ரயில்வே தடத்தில் ஆய்வு செய்தனர். உசிலம்பட்டி ரயில்நிலையத்தில் இருந்து செல்லம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி, மதுரை வரை உள்ள ரயில் பாதையில் நிலை குறித்தும், வேகம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், தற்போது அகல ரயில்வே பாதை பணி உசிலம்பட்டி வரை நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நாளை(இன்று) நடக்கிறது. மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படும். பணிகள் போடி வரை வருகின்ற மார்ச் மாதம் இறுதிக்குள் முடிவடையும். அதன்பிறகு ரயில் போடி வரை இயக்கப்படும்’’ என தெரிவித்தனர். ஆய்வில் ரயில்வே அதிகாரிகள் லெனின், வெங்கடாச்சலம், ஸ்ரீனிவாஸ், வரபிரசாத், இளம்பூரணன், ரவிக்குமார், அதானி  உள்ளிட்ட ரயில்வேத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Madurai-Bodi ,Usilampatti ,
× RELATED குளியல் தொட்டியில் வழுக்கி விழுந்து முதியவர் பலி