×

ஒரத்தநாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

ஒரத்தநாடு, ஜன. 24: ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது. ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மருத்துவமனை மேற்பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் போலீசார், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags : Camp ,
× RELATED கூடலூர் அரசு கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி