×

இறந்தவர் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு சுடுகாட்டு பாதைபிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி மறியல் போலீசார் சமரசம்

அறந்தாங்கி, ஜன.24: அறந்தாங்கி அருகே விக்னேஸ்வரபுரத்தில் இறந்தவரின் உடலை கொண்டு செல்வதற்கான சுடுகாட்டு பாதை பிரச்னையை தீர்த்து உடலை அடக்கம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று இறந்தவரின் உறவினர்கள் மறியல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அறந்தாங்கி-ஆவுடையார்கோவில் சாலையில் அரசு பாலிடெக்னிக் அருகில் உள்ள விக்னேஸ்வரபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் காளிமுத்து(53). இவர் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. இந்நிலையில் இவர் நேற்றுமுன்தினம் இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார். இவர் வணிக மற்றும் வர்த்த நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனத்தில் அதற்குரிய உபகரணங்கள் வைத்து விளம்பரம் செய்து வரும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இறந்தவரின் உடலை விக்னேஷ்வரபுரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுசெய்த நிலையில் மயானத்தின் அருகில் ஒருவருக்கு சொந்தமான பட்டா இடம் உள்ளது.

அந்த இடத்தை ஒட்டியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த இடத்திற்குரிய நபர் என் இடத்தின் அருகே உடலை கொண்டு செல்லக்கூடாது, அடக்கம் செய்ய கூடாது என்று தெரிவிக்கவே பாதிக்கப்பட்ட இறந்தவரின் உறவினர்கள் அறந்தாங்கி-ஆவுடையார்கோவில் சாலையில் மறியல் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அறந்தாங்கி டிஎஸ்பி பாலமுருகன் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசினார். பின்னர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி பட்டா இடம் அருகில் உடலை அடக்கம் ஏற்பாடு செய்வதாக உறுதி கூறிய நிலையில் மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர்.இந்த மறியல் காரணமாக அறந்தாங்கி -ஆவுடையார்கோவில் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : deceased ,
× RELATED ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2...