×

கொள்ளிடம் பகுதியில் மணல் தட்டுப்பாட்டால் வீடுகட்டும் பணிகள் பாதிப்பு

கொள்ளிடம், ஜன.24: கொள்ளிடம் பகுதியில் மணல் தட்டுப்பாட்டால் வீடுகட்டும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பசுமை வீடுகள் மற்றும் பாரத பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் வீடுகட்டும் பயனாளிகள் வீடுகட்டுவதற்கான மணல் கிடைக்காததால் வீடுகட்டும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசு குறிப்பிட்ட தேதிக்குள் வீடுகட்டி நிறைவேறாத நிலையிலும் உள்ளது. தற்பொழுது கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மணல்கள் வீடுகட்டும் பயனாளிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்கு மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொள்ளிடத்தில் அரசு மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது மணல் தட்டுப்பாட்டினால் கட்டுமான பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் அரசு சார்பில் கொடுக்கும் வீடுகளை ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்களால் கட்டப்படுவதால் குறைந்த விலையில் மணல் வழங்க நாகை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வீடுகட்டும் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்