×

பிறந்த நாள் விழாவையொட்டி புதுப்பிக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் சிலை திறப்பு

கரூர், ஜன. 24: சுபாஷ்சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி புதுப்பிக்கப்பட்ட சிலை திறக்கப்பட்டது. கரூர் மார்க்கெட் அருகில் சுபாஷ்சந்திரபோஸ் சிலை புதுப்பிக்கப்பட்டது.நேற்று சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவில் சிலை திறக்கப்பட்டது. ராஜேந்திரன் தலைமை வகித்தார். அவினாசிலிங்கம் தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் அன்பழகன் சிறப்புரையாற்றினர்.

அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் சமிதி தலைவர் மத்தாடு, மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓம்சக்திசேகர் நன்றி கூறினார்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்