×

ஒட்டன்சத்திரம் அருகே டச்சு நாணயம் கண்டெடுப்பு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வாகரை கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். வேதியியல் விரிவுரையாளரான இவர் தனது வீட்டை புதுப்பிக்கும்போது ஒரு பழைய நாணயத்தை கண்டெடுத்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அரிஸ்டாட்டில், லட்சுமணமூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.அந்த நாணயத்தை ஆய்வு செய்த பின் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கி.பி. 1602ல் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியினர், விரிங்கெ ஊஸ்ட்டிண்டிஸ் கம்பெனி ஒன்றை தொடங்கினர். இது தான் உலகின் முதல் பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும். இந்த கம்பெனி தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளிலும், இலங்கையிலும் வணிகம் செய்தபோது புழக்கத்தில் விடப்பட்ட நாணயம் தான் இது. இந்த நாணயம் கி.பி. 1746ம் ஆண்டு அச்சிடப்பட்டிருந்தது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் டச்சு கம்பெனியை குறிக்கும் விஓசி என்ற குறியீடு உள்ளது. மறுபக்கத்தில் சிங்க சின்னம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த நாணயம் அச்சடிக்கும் இடம் கொச்சி, நாகப்பட்டினம், புலிகாட், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்தன. பணம், துட்டு, காசு, தம்பிடி, சல்லி ஆகியவை நாணயத்திற்கான வேறு பெயர்களாக இன்றும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாணயம் ஜாவா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்காக தயாரிக்கப்பட்டவை. பின்னர் இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் இந்த நாணயங்கள் தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, சேதுக்கரை, பால்கரை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன’’ என்றார்….

The post ஒட்டன்சத்திரம் அருகே டச்சு நாணயம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Otensactram ,Gobalakrishnan ,Vagarai ,Otansatram, Tintukal District, Otansathram ,Otansatri ,
× RELATED அவரையில் காய் புழு தாக்குதலை தடுக்கும் முறைகள்