×

பனியால் புற்கள், செடிகள் கருகும் அபாயம் ஓட்ஸ் பயிர்களுக்கு மாறிய விவசாயிகள்

ஊட்டி, ஜன. 23: பனிக்காலம் துவங்கிய நிலையில், இயற்கை தாவரங்கள் மற்றும் புற்கள் கிடைக்காத நிலையில் தற்போது ஓட்ஸ் பயிர்கள் ஊட்டியில் பயிரிடப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், ஆண்டிற்கு 6 மாதங்கள் மழை பெய்யும். இதனால், பெரும்பாலான பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கும். அதேசமயம், நவம்பர் மாதம் பனி விழத்துவங்கினால், தொடர்ந்து நான்கு மாதங்கள் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் வனங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள புற்கள், செடி, கொடிகள் அனைத்தும் காய்ந்து போய்விடும்.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்த நான்கு மாதங்கள் பனி பொழிவால் பசுமை காணாமல் போய்விடும். இதனால், கால்நடைகளுக்கு புற்கள், செடி, கொடிகள் போன்ற இயற்கை தீவனங்கள் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் தற்போது தங்களது மாடுகளுக்கு பனிக்காலங்களில் தேவையான பசுந்தீவனங்களை தயார் செய்துக் கொள்கின்றனர். குறிப்பாக, நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை 6 மாதங்களுக்கு தேவையான பசுந்தீவனங்களை ஓட்ஸ் பயிர்கள் மற்றும் சோளத்தட்டை போன்றவைகளை தங்களது தோட்டங்களில் பயிரிட்டு கால்நடைகளுக்கு வழங்குகின்றனர். தற்போது ஊட்டி அருகேயுள்ள லவ்டேல் சந்திப்பு, பிங்கர்போஸ்ட், ஆடாசோலை, தேனாடுகம்பை போன்ற பகுதிகளில் ஓட்ஸ் பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன.

Tags : deforestation ,
× RELATED கலிஃபோர்னியாவில் வரலாறு காணாத...