×

சிறப்பு அறிமுக பயிற்சி முகாம் மக்களை அதிகம் சந்தித்து குறைகளை தீர்க்க வேண்டும்

ஊட்டி, ஜன. 23:ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு அறிமுகப் பயிற்சி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு அறிமுகப் பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து பேசியதாவது:- ஊரக பகுதிகளில் முழுமையான வளர்ச்சிக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அதிக பங்கு உள்ளது. கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பொதுமக்கள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் மட்டுமே தெரிவித்து வந்தனர். தற்போது, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அந்தந்த கிராம பொது மக்கள் தங்களின் குறைகளை அருகில் உள்ள பிரதிநிதிகளிடம் தெரிவிக்க ஏதுவாக உள்ளது.

நீங்கள் பொதுமக்களை அதிகளவில் சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் துணையாக இருக்கும். நீலகிரி மாவட்டமானது விலங்குகளும், வனங்களும் மற்றும் மக்கள் நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. நீலகிரி சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளதால், அதன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவிற்கு குறைந்துள்ளது. இதற்கு முழு காரணம் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் ஒத்துழைப்பாகும். அந்தந்த ஊராட்சிகளில் நீங்கள் தவறாமல் சோதனை மேற்கொள்ள வேண்டும். முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது நீலகிரி மாவட்டம் அதிக கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சியாக உள்ளது. எனவே, அனைத்து கிராம மக்களுடனும் நீங்கள் ஒருங்கிணைந்து கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும், என்றார்.

Tags : training camp ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்