×

மசினகுடி - முதுமலை சாலையோரங்களில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணிகள் மும்முரம்

ஊட்டி, ஜன.23:ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வட கிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். இவ்விரு பருவமழையும் குறித்த சமயத்தில் பெய்தால், ஆண்டு முழுக்க அனைத்து நீரோடைகள், ஆறுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இருக்கும். வனங்களும் பசுமையாக காட்சியளிக்கும். ஆனால், இம்முறை இவ்விரு பருவமழையும் பெய்த நிலையில், தற்போது வரை வனங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, மித வெப்ப பகுதியான முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் போன்ற பகுதிகளில் கூட பசுமை தெரிகிறது. மரங்களில் உள்ள இலைகளும் காய்ந்து போக துவங்கியுள்ளன. இதனால், யானை, புலி, காட்டுமாடு போன்ற விலங்குகள் நீர் நிலைகளை தேடி செல்லம் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வனங்கள் காய துவங்கியுள்ள நிலையில், கோடை காலத்தில் வனங்கள் காய்ந்து காட்டு தீ ஏற்டும் அபாயம் நீடிக்கிறது. மேலும், முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாகவே ஊட்டி தேசிய மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்லும் நிலையில், ஏராளமான வாகனஙகள் இவ்வழித்தடம் வழியாக சென்று வருகின்றன.

சுற்றுலா பயணிகள் சிகரெட் குடித்துவிட்டு சாலையோரங்களில் எறிந்தால் கூட வனங்கள் தீ பற்றிக் கொள்ளும் அபாயம் நீடிக்கிறது. இந்நிலையில், காட்டு தீ ஏற்படாமல் தடுக்க வனங்களில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதுமலை - மைசூர் சாலையின் இரு புறங்களிலும் தீ தடுப்பு கோடுகள் 10 மீட்டருக்கு அமைக்கப்பட்டு வருகிறது. மசினகுடி முதல் தெப்பக்காடு வரையில் சாலைேயாரங்களில் உள்ள செடி, கொடிகள் மற்றும் புற்கள் ஆகியவை அழித்து  மூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Tags : Masinagudi - Mudumalai Road ,
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு