×

வீடு புகுந்து நகை திருட்டு

கோவை, ஜன.23: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் கவுசிக் (33). இவர், கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அங்குள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த அவருடைய தந்தை காளிமுத்து கடந்த 15ம் தேதி இறந்தார். 20ம் தேதி வரை அங்கிருந்த கவுசிக், தந்தையின் இறுதி சடங்குகளை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11.5 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து கவுசிக் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல கோவை போத்தனூர் பக்கமுள்ள செட்டிபாளையம் சங்கமம் நகரை சேர்ந்தவர்  அப்புக்குட்டன்(59), டெய்லர். இவர், கடந்த 15ம் தேதி வீட்டை  பூட்டிவிட்டு வேலை விஷயமாக குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து மறுநாள் திரும்பிவந்தபோது வீட்டின் முன்பக்க  கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கக்காசு, அரை பவுன்  எடையுள்ள 2 கம்மலை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். அப்புக்குட்டன் செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது அப்புக்குட்டன்  வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 மர்ம நபர்களின்  உருவம்  பதிவாகி இருந்தது. அதில் ஒருவர்  காந்திபார்க் பக்கமுள்ள சொக்கம்புதூரை சேர்ந்த ஸ்ரீபிரதானந்த் (22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவருடைய நண்பர் கவுதமை போலீசார் தேடி  வருகின்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்