×

சேத்தூர் பேரூராட்சியில் பயமுறுத்தும் பயனற்ற போர்வெல் குழந்தைகளுக்கு விபத்து அபாயம்

ராஜபாளையம், ஜன. 23: ராஜபாளையம் அருகே, சேத்தூர் பேரூராட்சியில் பயனற்ற போர்வெல்லால் குழந்தைகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போர்வெல்லை முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே, சேத்தூர் பேரூராட்சி 6வது வார்டில் ஏகேஜி நகர் உள்ளது. இங்கு குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே, தனியாருக்கு சொந்தமான நூல் கண்டு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை பணியாளர்களின் பயன்பாட்டுக்காக, சில மாதங்களுக்கு முன்னதாக ஆலையின் முன்புறம் இரண்டு போர்வெல்கள் அமைக்கப்பட்டன. இதில் ஒன்றில் தண்ணீர் வரவில்லை. இந்த போர்வெல்லை முறையாக மூடாமல் வெறும் கல்லை வைத்து மூடியுள்ளனர். விநாயகர் கோயில் தெரு மிகவும் குறுகலாக இருப்பதால், குழந்தைகள் ஆலையின் முன்புறம் அடிக்கடி விளையாடுவர். கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பெண்களும் குழந்தைகளும் வருகின்றனர்.

போர்வெல்லை முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலை நிர்வாகத்திடம் அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அதற்கு ஆலை நிர்வாகம் இரண்டு கற்களை மட்டும் குழாயின் மேல் வைத்து மூடியுள்ளனர். எந்த நேரமும் இந்த கற்கள் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன்னர் பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு, இந்த போர்வெல் குழாயை சிமெண்ட் பலகை கொண்டு, மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவனிடம் கேட்டபோது, ‘போர்வெல் குழாயை முறையாக மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : children ,borewells ,barracks ,Chetur ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்