×

பள்ளியில் யோகா முகாம்

அருப்புக்கோட்டை, ஜன. 23: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி சௌடாம்பிகா கான்வென்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வாழும் கலை என்ற தலைப்பில் யோகா முகாம் நடந்தது. கல்லூரி செயலாளர் பாஸ்கரராஜன் தலைமை வகித்தார். முதல்வர்கள் அருள்மொழி, பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். சென்னையை சேர்ந்த வாழும் கலை ஆசிரியை வாசுகி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சியை கற்றுக்கொடுத்தார். கோவை பயிற்சியாளர்கள் உண்ணாமலை, கிருஷ்ணவேணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் ரமேஷ்பாபு, உடற்கல்வி இயக்குநர் அன்பழகன், வேலைவாய்ப்பு அதிகாரி கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்

Tags : Yoga camp ,school ,
× RELATED தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் வாங்க...