×

சிவகாசியில் ஊருணியை ஆக்கிரமித்த பிளாஸ்டிக் கழிவுகள் பராமரிப்பின்றி பாழ்படும் நீராதாரம்

சிவகாசி, ஜன. 23: சிவகாசியில் உள்ள பொத்துமரத்து ஊருணியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால், நீராதாரம் பாழ்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் நகரின் நீராதாரத்தை பெருக்க கண்மாய், குளங்கள், தெப்பங்களை அமைத்துள்ளனர். இந்த நீர்நிலைகளில் மழைநீர் கேரிக்கப்பட்டதால் நிலத்தடி நீராதாரம் அதிகரித்து வந்தது. போர்வெல் கிணறுகளிலும் நிலத்தடி நீர் அதிகரித்து வந்தது. இந்நிலையில் நகர் பகுதியில் உள்ள பல தெப்பங்கள், குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி காணமல் போய்விட்டன. இதனால், நகரின் நிலத்தடி நிர் ஆதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், நகரின் மையப்பகுதியில் உள்ள பொத்துமரத்து ஊருணியில் வேன் ஸ்டாண்ட் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். நகராட்சி முன்னாள் தலைவர் இந்த வேன் ஸ்டாண்ட்டை அகற்றி, ஊருணியை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பல லட்சம் மதிப்பில் ஊருணியில் இருந்த முட்செடிகள், படர்தாமரை செடிகளை அகற்றி ஆழப்படுத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே ஊரணி ஆழப்படுத்தும் பணியின்போது மழை காரணமாக ஊரணியில் தணணீர் நிரம்பியது. இதனால் ஆழப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் ஊரணி ஆழப்படுத்தும் பணியை நகராட்சி நிர்வாகம் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் ஊருணி கரையில் கடைகள், கோவில் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர். நகரின் குடிநீர் ஆதாரமான பெரியகுளம், சிறுகுளம் கண்மாய்களின் நீர் வரத்து கால்வாயில் கட்டிடங்கள், வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த கண்மாய்கள் எப்போதும் வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. நகரில் கோடை காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

மேலும், நாராணாபுரம், போஸ் காலனி, புதுத்தெரு ஆகிய பகுதிகளின் கழிவுநீர் பொத்துமரத்து ஊருணியில் கலந்து வருகிறது. இதில், புதுத்தெரு அருகே ஊருணியில் பிளாஸ்டிக் கழிவு குப்பைகளை மலைபோல் கொட்டியுள்ளனர். இதனால், நிலத்தடி நீர் மாசடைவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் மழைநீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊருணியில் உள்ள பிளாஸ்டிக் குப்கைளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் ஊருணியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் ஊருணி சுருங்கி வருகிறது. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊருணியை ஆழப்படுத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு