×

வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி

தேனி, ஜன. 23:தேனி நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டிகள் நடந்தன. மகளிர் குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கோலம் வரைந்தனர். நகராட்சி கமிஷனர் நாகராஜன், பொறியாளர் சுரேஷ்குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், மேலாளர் நாகேந்திரன், கணக்கர் ரத்தினப்பா, தேர்தல் உதவியாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். சிறந்த கோலம் வரைந்தவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags : Voter awareness rally ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி