×

கோம்பையில் போக்குவரத்து சிக்கல்

தேவாரம், ஜன. 23: கோம்பை பேரூராட்சி வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, பெருகிவரும் குடியிருப்புகள் போன்றவற்றால் கோம்பை மாநில நெஞ்சாலையில் வாகன நெரிசல் உண்டாகி வருகிறது. குறிப்பாக உத்தமபாளையத்தில் இருந்து கோம்பை வழியே தேவாரம் செல்வதற்குள் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் திண்டாடுகின்றனர். காலை நேரங்களில் அதிகமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன. இதேபோல் சரக்கு லாரிகள், டூவீலர்கள், கார்கள் போன்றவையும் அதிகளவில் செல்கின்றன. இவை அனைத்தும் கோம்பை கிராம சாவடி வழியே செல்லும் போதும், தேவாரத்தில் இருந்து அண்ணாசிலை வழியே செல்லும்போது வாகன நெரிசல் உண்டாகிறது. சாலைகளின் இரண்டுபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ள நிலையில் எதனையும் போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

எனவே கோம்பை ஊருக்குள் சரக்கு வாகனங்கள், டூவீலர்கள் நுழையாமல் இருக்க பைபாஸ் சாலை அமைத்திட தேவையான திட்ட வரைவுகளை மாநில நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் தயாரிக்க வேண்டும். குறிப்பாக ஊருக்கு வெளியே உள்ள சிக்கிச்சியம்மன் கோயில் சாலையில் இருந்து பிரித்து பைபாஸ் சாலை அமைக்கப்பட்டால் வாகன நெரிசல் உண்டாகாது. இதனை உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது மிக அவசியம். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘
வாகனநெரிசல் தினந்தோறும் உண்டாகிறது. கோம்பை ஊருக்குள் ஆபத்தான சரக்கு வாகனங்கள், டூவீலர்கள் செல்லாமல் இருக்க பைபாஸ் சாலை அமைத்திட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வாகன விபத்துக்கள் ஏற்படாது. போக்குவரத்தும் எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் செல்லும்’ என்றனர்.

Tags : Gombe ,
× RELATED கோம்பை பேரூராட்சியில் ரூ.84 லட்சம்...