×

கமுதியில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

கமுதி, ஜன.23:  கமுதியில் உள்ள சுந்தரபுரத்தில் சேதமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரி செய்ய தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது. கமுதி சுந்தரபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கமுதியின் ஏராளமான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல வருடங்களாக இந்த தொட்டி மிகவும் சேதமான நிலையில் உள்ளது. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. உயிர் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ள இந்த தொட்டியினை சீர் செய்ய இப்பகுதி மக்கள் பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக நகரச் செயலாளர் சேக் முகம்மது கூறுகையில், சுந்தரபுரத்தில் உள்ள சேதமான இந்த நீர்த்தேக்க தொட்டியை

Tags : Kamathi ,
× RELATED பொறுப்பாளர்களுக்கு பயிற்சி