×

இந்தியன் வங்கி ஏடிஎம்.மில் தீ விபத்து

மதுரை, ஜன.23: மதுரை நேதாஜி ரோட்டில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் புகை சூழ்ந்தது. அருகில் உள்ள கடைக்காரர்கள் இது குறித்து வங்கிக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, மும்பையில் உள்ள `நீசா பயர் கன்ட்ரோல்’ அறையிலிருந்தும், மதுரை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தும், மதுரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் வந்தது. உடனே நிலைய அதிகாரி(போக்குவரத்து) ரவி தலைமையில் 7 பேர் கொண்ட தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தீவிபத்தில் ஏடிஎம் மையத்திலிருந்த இன்வெர்ட்டர் எரிந்து சாம்பலானது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பணத்துடன் ஏடிஎம் மிஷின் தப்பியது.

Tags : Indian ,ATM ,
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்