×

நத்தத்தில் கூட்டம்

நத்தம், ஜன. 23:  நத்தத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஷாஜகான் தலைமை வகிக்க, நகர செயலாளர் சிவலிங்கம், நகர அம்மா பேரவை செயலாளர் சேக்தாவூது, ஒன்றிய அவைத்தலைவர் பிறவி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னா, பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், சேத்தூர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சேக்ஒலி மற்றும் கவுன்சிலர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Meeting ,Natham ,
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை...