×

சின்னாளபட்டியில் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய வணிகர்களுக்கு அபராதம்

சின்னாளபட்டி, ஜன. 23: சின்னாளபட்டி பகுதியில் நடந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வணிகர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சின்னாளபட்டி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில்  பணியாளர்கள் ஆய்வு செய்தனர். சின்னாளபட்டி பூஞ்சோலை, காமராஜர் சாலை, தேவாங்கர் பள்ளி சாலை, கஸ்தூரிபாய் மருத்துவமனை சாலை பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், லசரக்கு கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆய்வின்போது விதிமீறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வு குறித்து செயல் அலுவலர் கலையரசி கூறுகையில், ‘கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து வருகிறோம். முதற்கட்டமாக நெகிழிப்பைகள் பயன்படுத்திய வணிகர்கள், ஓட்டல்- பேக்கரி உரிமையாளர்களுக்கு ரூ.ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நெகிழிப்பைகளை அவர்கள் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும்’ என்றார். ஆய்வின் போது துப்புரவு ஆய்வாளர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் சரவணன், தங்கத்துரை, அகிலன், வரிவசூலர்கள் சாந்தி, கருப்பையா, குணசேகரன், இளநிலை உதவியாளர் சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்