×

காரிப்பட்டியில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு

அயோத்தியாபட்டணம், ஜன.23: அயோத்தியாபட்டணம் அருகே காரிப்பட்டி பகுதியில், குடிநீர் குழாய் உடைந்து லட்ச கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. அயோத்தியாபட்டணம் சுற்றுவட்டார பகுதியான அக்ரஹார நாட்டமங்கலம், கூட்டாத்துப்பட்டி, காரிப்பட்டி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் குடிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இந்த பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் தினமும் நீண்ட தூரம் சென்று, குடிநீர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காரிப்பட்டியில், பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும், குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்பபை சீரமைக்க, அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Tags : Breakdown ,Karipatti ,
× RELATED பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்...