×

கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க முகாம்

நாமக்கல், ஜன.23: நாமக்கல்லில், கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து  நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கறவை பசுக்கள் மற்றும்  வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை மற்றும்  குடற்புழு நீக்க முகாம், நாளை  (24ம் தேதி) மற்றும் 25ம் தேதி ஆகிய 2 நாட்கள்  நடைபெறுகிறது.இலவச கறவை பசுக்களின் பால் உற்பத்தித்திறனை பெருக்கவும்,  வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் எடையினை அதிகரிக்கவும், பசுக்களுக்கு  இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம்கள்  நடைபெறுகிறது. இதனை பயனாளிகள் மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும்  பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Livestock Breeding Camp for Livestock ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி