×

சூளகிரி அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்கூடம்

சூளகிரி, ஜன.23: சூளகிரி-கும்பளம் செல்லும் சாலையில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூளகிரி செம்பரசனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கும்பளம் சாலையில், செம்பரசனபள்ளி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் கட்டி 30 ஆண்டுகளான நிலையில் மேல்தளம் சிதிலமடைந்துள்ளதால் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால், இந்த நிழற்கூடத்தை பயன்படுத்தி வரும் சக்காரளு, சின்னபாப்பனபள்ளி, பெரியபாப்பனபள்ளி, செம்பரசனபள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சிதிலமடைந்துள்ள இந்த நிழற்கூடத்தை இடித்து விட்டு, புதிய நிழற்கூடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,Sulagiri ,
× RELATED நீடாமங்கலம் - மன்னார்குடி இடையே ரயில்...