×

மத்தூர் அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை

போச்சம்பள்ளி, ஜன.23:  மத்தூர் ஒன்றியம் சிவம்பட்டி ஊராட்சியில் ₹34 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. மத்தூர் ஒன்றியம் சிவம்பட்டி ஊராட்சியில் கெங்கலேரியான் கொட்டாயிலிருந்து திருப்பத்தூர் வரை ₹34 லட்சம் மதிப்பில் 2 கி.மீ தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது. ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்து பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனியம்மாள் மனோகரன், மீனாசக்தி, சக்கரை, துணை தலைவர் வெங்கடாசலம், வங்கி தலைவர் சக்தி, குன்னத்தூர் பெருமாள், பியாரேஜான், முனுசாமி, நடராஜ், மணிவண்ணன், பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pooja ,Earth ,tar road ,Mathur ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை