×

முக்கூடல் பள்ளி வளாக கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

பாப்பாக்குடி, ஜன.23:  முக்கூடலில் இயங்கிவரும் சொக்கலால் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆசிரியர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான கிணற்றில் நேற்று மாலை 3 மணியளவில் மாடு ஒன்று தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த சேரன்மாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் வீரர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் மாட்டை  உயிருடன் மீட்டனர்.  இப்பள்ளியின் சுற்றுச்சுவர் சரியில்லாததால் ஆடு, மாடுகள் புகுந்து மைதானத்தில் விளையாடும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டிய மக்கள், கிணற்றை சுற்றி சுமார் 2 அடி உயரத்தில் மட்டுமே தடுப்புச்சுவரும், கம்பு மீது தகரம் விரித்து மூடப்பட்டிருந்ததால் அதன் மீது ஏறிய மாடு கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகவும் கூறினர். எனவே, பாதுகாப்பு கருதி கிணற்றுக்கு சுற்றுச்சுவர், கம்பி வளைகள் அமைப்பதோடு முறையாகப் பராமரிக்க
வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : well ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை