×

திருவண்ணாமலை ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி 13 குறுவள மையங்களில் இன்று நடக்கிறது

திருவண்ணாமலை, ஜன.23: திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 13 குறுவள மையங்களில் இன்று பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடக்கிறது. திருவண்ணாமலை வட்டார வளமையத்தில் உள்ள அரசு ெதாடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி மேலாண்ைமக்குழு உறுப்பினர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 13 குறுவள மையங்களில் இன்று(வியாழன்) பயிற்சி முகாம் தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 6 உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009, குழந்தைகளின் உரிமைகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பணிகள், பாலின பாகுபாடு, பேரிடர் மேலாண்மை, உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள், பள்ளி மேலாண்மைக்குழு- பள்ளி நிதியை பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல், சமூக தணிக்கை நடத்தை மாற்றம் மற்றும் கற்றலில் புதுமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Tags : School Management Committee ,Thiruvannamalai Union ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி