வாகன ஓட்டிகளுக்கு ரோஜா கொடுத்து போக்குவரத்து போலீசார் பிரசாரம்

சின்னசேலம், ஜன. 23: சின்னசேலத்தில் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் முன்னிலையில் சின்னசேலம் போலீசார் பஸ்நிலைய பகுதியில் சாலை பாதுகாப்பு பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது பயணி, வாகன ஓட்டிகளிடம் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது. குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். மேலும் இன்ஸ்பெக்டர் சுதாகர் விபத்துகளை தடுத்திட வாகனங்களில் அதிக ஒளி உமிழும் விளக்குகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் கார், பஸ் போன்ற வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர். அதைப்போல சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் ரோஜா மலர், லட்டு, பழ வகைகளை கொடுத்து நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில் சிறப்பு எஸ்ஐக்கள் சந்திரன், சுப்பிரமணியன், பாஸ்கர், தலைமை காவலர் விஜய், கண்மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Tags : Traffic cops ,motorists ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ₹2.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்