×

சாத்தான்குளம் அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் கோஷ்டி மோதல்: 7 பேர் மீது வழக்கு

சாத்தான்குளம், ஜன.23: சாத்தான்குளம் அருகே உள்ளாட்சி தேர்தல் முன் விரோதத்தில் ஏற்பட்ட கோஷ்டிமோதல் தொடர்பாக  7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மலர்கொடி(35). இவரது மனைவி பிரேமா(32). ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தலைவராக கீதா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் கிறிஸ்டோபர் வெற்றி பெற்றார். இதனிடையே ஊராட்சி மன்ற உறுப்பினரான பிரேமா, துணை தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவாக செயல்படவில்லையென கூறி ஊராட்சித்தலைவர் கீதாவின் கணவர் கணேசன்,  பிரேமா மற்றும் அவரது கணவர் மலர்கொடியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவத்தன்று கணேசன் மற்றும் கட்டாரிமங்கலத்தை சேர்ந்த அய்யாச்சாமி, சாமத்துரை, ராஜா, உமேஸ் ஆகிய 5பேரும் தாக்கியதில் மலர்கொடி காயமடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார். இதுபோல் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் பிரேமாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த முருகம்மாள் கணவர் உமேஸ் அளித்துள்ள புகாரில் தன்னை மலர்கொடி, அவரது மனைவி பிரேமா ஆகியோர் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மலர்கொடி, பிரேமா ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : government ,polls ,sathankulam ,
× RELATED எப்போது வெளியே சென்றாலும் கட்டாயம்...