×

தூத்துக்குடியில் தெரு நாய்களுக்கு கருத்தடை

ஸ்பிக்நகர், ஜன.23: தூத்துகுடி மாநகராட்சி மற்றும் ஜீவ காருண்ய விலங்குகள் நல அமைப்பு இணைந்து தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டது.தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம், காதர் மீரான் நகர், தெர்மல்நகர், கோயில் பிள்ளை நகர் பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெரு நாய்களால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெரு நாய்கள் பெரும்பாலும் பல்வேறு நோய் கிருமிகளால் தாக்கப்படுகின்றன. அது போன்ற நாய்கள் கடித்தால் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறியவர்களும் உயிரிழக்கும் சூழல் உள்ளது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், ஜீவ காருண்ய விலங்குகள் நல அமைப்பினர் இணைந்து தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் சுமார் 50க்கும் ேமற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டது.
 இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில்,  பிடிக்கப்பட்டநாய்களுக்கு தருவைகுளத்தில் உள்ள தெருநாய்கள் கருத்தடை மையத்தில் வைத்து கருத்தடை செய்யப்பட்டு ரேபிஸ் தடுப்பூசிபோடப்படுகிறது. இதனால் அந்த நாய்கள் யாரையாவது கடித்தாலும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தெருநாய்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும்’ என்றார்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...