×

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி, ஜன.22: திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக இருக்கிறது. ஆனால் குத்தகை உரிமம்படி திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இதனால் தெப்பகுளம் பகுதியைச் சுற்றியு ஏராளமான ஆக்கிரமிப்புகளை அவ்வப்போது மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. ஆனால், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ெதாடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று தெப்பக்குளம் படித்துறை பகுதியில் போடப்பட்டிருந்த தரை கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அதன் பின்பு அங்கு மீண்டும் கடைகள் போட்டு ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்க இரும்பு கம்பி தடுப்புகளை அமைத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை