×

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்த தேர்தல் அலுவலரை நீக்க வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

விருதுநகர், ஜன. 22: விருதுநகரில் உள்ள ஆர்.ஆர்.நகர் முக்குரோட்டில் இ.கம்யூ.,மற்றும் மதிமுக சார்பில், ஆவுடையாபுரம் ஊராட்சி மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்த தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இ.கம்யூ மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை வகித்தார். மதிமுக இணை செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில நிர்வாகக்குழு ராமசாமி, மதிமுக மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ரகுராமன், மதிமுக துணைச் செயலாளர் லட்சுமணன், முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர் ஊர்காவலன் பலர் சிறப்புரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், ‘ஆவுடையாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்த தேர்தல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்திரவிட வேண்டும். தபால் ஓட்டுகளை முறையாக எண்ணப்படாமலும், பதிவான வாக்குகளை குறைவாக கணக்கீடு செய்த தேர்தல் அலுவலரை பதவி நீக்கம் செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஆவடையாபுரம், ஆர்.ஆர்.நகர் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : election officer ,demonstration ,
× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்