×

மூணாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை

மூணாறு, ஜன.22: மூணாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் இடுக்கி ஆட்சியர் தினேஷன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மூணாறில் தற்போது குளிர் காலம் துவங்கிய நிலையில், காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மூணாறில் முக்கிய ஆறுகள் வறண்டு வரும் நிலை உருவாகியுள்ளது. காடுகளில் குடிநீர், உணவு கிடைக்காமல் காட்டு யானைகள் கூட்டம் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் படையெடுத்த வண்ணம் உள்ளது. கடந்த வாரத்தில் மூணாறு சொக்கநாடு எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை துவசம் செய்தது. மேலும் மூணாறு சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களை நோட்டமிட்டு வரும் யானைகள் காலை முதல் மாலை வரை குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் யானைகளுக்கு பயந்து வேலைக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காட்டு யானை தொந்தரவில் இருந்து பொதுமக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் தலைமையில் வனத்துறை அதிகாரிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர், யானைகள் தொந்தரவு காரணமாக தினந்தோறும் பல புகார்கள் வந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் உடனடியாக காட்டில் இருந்து குடியிருப்புகளில் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மாவட்டத்தில் நடைபெறும் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நிறுவடைந்தவுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் தோட்டத்தொழிளார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : areas ,Munnar ,
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...