×

திருப்புத்தூரில் பெண் சிசு கொலையை எதிர்த்து விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்புத்தூர், ஜன. 22: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் பெண் சிசு கொலையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.திருப்புத்தூர் அரசு மருத்துவமனையும், ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியும் இணைந்து நேற்று பெண் சிசு கொலை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் கல்லூரி வாசலில் இருந்து பெண் சிசு கொலையை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்நி ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலம் மதுரை ரோடு, அண்ணாசிலை, காந்திசிலை, பழைய பேருந்து நிலையம் சென்று மீண்டும் மதுரை ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையை அடைந்தது. ஊர்வலத்தில், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயந்தி, மருத்துவர் பிரசன்ன வெங்கடேஷ், தலைமை செவிலியர்கள் விஜயராணி, தனலெட்சுமி மற்றும் செவிலியர் கிஷோர்குமார், கல்லூரி விலங்கியல் துறை தலைவர் ஆனந்தவள்ளி, பேராசிரியர்கள் கோபிநாத், கார்த்திகேயன், ஜான்பால், ஆய்வக உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Tags : Thirupputhur ,
× RELATED திருப்புத்தூரில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா