×

சினிமா தியேட்டர்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்ஆய்வு

சிதம்பரம், ஜன. 22: சிதம்பரத்தில் உள்ள திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தரமற்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததால் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் இரண்டு சினிமா தியேட்டர்கள் உள்ளது. இங்கு தினமும் 4 காட்சிகள் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரையரங்கிற்கு சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து படம் பார்த்துவிட்டு செல்கின்றனர்.இந்நிலையில் இந்த திரையரங்கில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், அதை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் சிதம்பரம் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து சிதம்பரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த திரையரங்குகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திரையரங்கில் தயாரிப்பு தேதி, தயாரிப்பு முகவரி காலாவதி இல்லாத திண்பண்டங்கள், காலாவதியான குளிர் பானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தரமற்றவையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.பின்னர் இவற்றை கைப்பற்றிய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் கடை விற்பனையாளர்களை எச்சரித்தனர்.

Tags : movie theaters ,Food safety officers ,
× RELATED திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 2...