×

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் சிவகங்கை ஜிஹெச்சில் பரபரப்பு

சிவகங்கை, ஜன. 22:  சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் அண்ணாமலை (19). இவர் மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை சிவகங்கையில் இருந்து சாத்தரசன்கோட்டைக்கு டூவீலரில் செல்லும் போது எதிரே மற்றொரு டூவீலரில் வந்த நாடாமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திருமால்கண்ணன் (30)என்பவரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அண்ணாமலை மற்றும் திருமால் கண்ணன் இருவரும் இறந்தனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பகலில் இருவரது உடலுக்கும் பிரேத பரிசோதனை நடந்தது. அண்ணாமலையின் நண்பர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயிற்சி மருத்துவர் ஒருவரை அவர்களில் சிலர் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர். இதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்ஐ வாசிவம், தாசில்தார் மைலாவதி ஆகியோர் வந்து மருத்துவத்துறை அதிகாரிகள் போரட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைடுத்து ஒரு மணிநேரத்திற்கும் மேல் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags : Sivaganga GH ,protest ,doctor ,attack ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!