×

கீழக்கரை ரேசன் கடையில் மண்ணெண்ணெய் மாதந்தோறும் முறையாக வழங்குவதில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு

கீழக்கரை, ஜன.22:  கீழக்கரை நகராட்சியில் 12ஆயிரம் ரேசன் கார்டு தாரர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மண்ணெண்ணெய் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் மண்ணெண்ணெய் கடையை மாதத்திற்கு ஒரு முறை மட்டும் திறப்பதால் அனைவரும் வாங்க முடியாமல் கூட்டத்தில் சிக்கி திணறுகின்றனர். மேலும் மண்ணெண்ணெயை கள்ள மார்க்கெட்டில் விற்று விடுகின்றனர். ஆகவே கலெக்டர் இதுகுறித்து நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கீழக்கரையில் ஏழை எளிய மக்கள்தான் மண்ணெண்ணெய் வாங்கி பயன் படுத்துகின்றனர். இந்நிலையில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு தகுதியானவர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் வாங்க முடியவில்லை. இந்த நிலையை நியாயவிலை கடைக்காரர்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு நாங்கள் வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் போதே 60 லிட்டர், 30 லிட்டர் என்று மொத்தமாக விற்பனை செய்கின்றனர். ஆகவே எங்களின் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் நேரில் ஆய்வு செய்து விடுமுறை நாட்களை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் திறந்து மண்ணெண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : ration shop ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா