×

கடலாடி பகுதியில் பலத்த காற்றிற்கு முறிந்து விழும் அபாயத்தில் மின் கம்பங்கள்

சாயல்குடி, ஜன.22: கடலாடி பகுதி சாலையோரங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து எலும்பு கூடாக நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி மின்சார வாரிய அலுவலகம் எதிரே உள்ள தேவர் நகரில் சுமார் 30 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் வழியாக கமுதியிலிருந்து, கடலாடி மின்சார வாரியத்திற்கு உயர் அழுத்த மின்வயர்கள் செல்கிறது. மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து எலும்பு கூடாக நிற்கிறது. சிறு காற்று அடித்தால் கூட மின் கம்பம் முறிந்து, அருகிலிருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதன் வழியே கோவிலாங்குளம், கமுதி செல்ல சாலை இருப்பதால், இதன் வழியே செல்லும் வாகனங்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, மின்சார வாரிய அலுவலகம் எதிரே குடியிருப்பு பகுதிகளில் சேதம

Tags : sea ,
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்