×

திருப்பரங்குன்றத்தில் சாலையில் வீணாக ஓடும் குடிநீர் மெகா பள்ளமும் மிரட்டுகிறது

திருப்பரங்குன்றம், ஜன.22: திருப்பரங்குன்றத்தில் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கின்றது. இந்த சாலையின் வழியாகத்தான் திருப்பரங்குன்றம் காவல்நிலையம், காய்கறி மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் செல்ல முடியும். அதிகப்படியான டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த வழியாக சென்று வருவதால் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குறுகிய சாலையான இங்கு தற்போது குடிநீர் குழாய் உடைப்பால் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இவ்வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இது குறித்து மாநகராட்சியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : road ,Thiruparankundram ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...